அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி தங்காலைக்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளமையினால் தங்காலை நகரின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி தங்காலை சிறைச்சாலை நோக்கி முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து தங்காலை வரை பேரணியாகச் சென்றுள்ளனர்.