சீரற்ற வானிலை; 1,298 குடும்பங்களைச் சேர்ந்த 4,933 பேர் பாதிப்பு

32

** 6 பேர் பலி; 9 வீடுகள் முழுமையாக சேதம்

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 1,298 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள நிலைமை அறிக்கையின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் 1,298 குடும்பங்களைச் சேர்ந்த 4,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக 9 வீடுகள் முழுமையாகவும் 381 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group