கொழும்பு, கிராண்ட்பாஸில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

46

கொழும்பு -கிராண்ட்பாஸ்-செயின்ட் ஜோசப் வீதியில் வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸில் வசிக்கும் 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று இரவு முதியவர் ஒருவரை பராமரிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த வீட்டின் சுவர் அவர் மீது இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Join Our WhatsApp Group