அடுத்த வருட முற்பகுதியில் IMF இடமிருந்து முதலாவது கடன் தவணை

43

அடுத்த வருட முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது குழு வொஷிங்டனுக்கு சென்றபோது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து சகல கடன் வழங்குநர்களையும் அழைத்து கலந்துரையாடியதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலுக்கு அமைய நல்லது நடக்கும் என எதிர்பார்கிறோம்.
கடந்த வாரம் சீனாவின் நிதியமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். அடுத்த வருட முதற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து எமக்கு முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group