T20 உலகக்கிண்ணம்: ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து

33

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் குழு 1இல் 14ஆவது போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 113 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Join Our WhatsApp Group