T20 உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலிய அணியை 89 ஓட்டங்களால் வீழ்த்திய நியூசிலாந்து

0
31

உலக்கக்கிண்ண இருபதுக்கு 20 தொடரின் குழு 1 இல் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 89 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக டெவொன் கொன்வே 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக கிளென் மெக்ஸ்வெல் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் சௌத்தி மற்றும் மிச்சல் சென்டர் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்