அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச் சட்டமூலம் நேற்று (21) 178 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
எனினும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.
வருகை தராத எம்.பி.க்களில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான எம்.பி.க்கள் இருந்தனர்.
வருகை தராத நாடாளுமன்ற உறுப்பினர்களாக, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, காமினி லோககே, ரோஹித அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஏனைய சபை உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.