தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகள் திறப்பு

37

தற்போது பெய்து வரும் மழை நிலைமை காரணமாக நேற்று (21) இரவு முதல் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார். 4 கதவுகளும் திறக்கப்பட்டதன் மூலம் நீர்த்தேக்கத்தில் இருந்து தெதுரு ஓயாவிலிருந்து செக்கனுக்கு 5,500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படும் எனவும், இதன் காரணமாக தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படாது எனவும் பொறியியலாளர் சம்பத் தெரிவித்தார்.

தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 70.6 மீற்றராக உள்ளது. அதன் வான் வெளியேற்ற அளவு 70.79 மீற்றர் எனவும் நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவு ஏக்கருக்கு 60,000 அடி எனவும் அவர் தெரிவித்தார்

Join Our WhatsApp Group