சபையில் நிறைவேற்றிய 22ஆவது திருத்தம் 21 ஆக மாறியது

52

இலங்கையின் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் பெயரை 21ஆவது திருத்தம் என மாற்றுவதற்கு குழுநிலையின் போது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே அரசியலமைப்புத் திருத்தம் இப்போது 22ஆவது திருத்தம் என்று அழைக்கப்படாமல் 21ஆவது திருத்தம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார 21ஆவது திருத்தம் என்று பெயரிடப்பட்ட மற்றொரு திருத்தத்தை சமர்ப்பித்தநிலையில், அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட திருத்தம் 22ஆவது திருத்தம் என்று பெயரிடப்பட்டது. எனினும் இந்த திருத்தத்தை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group