Breaking news: 22ஆவது திருத்த சட்டம் சபையில் நிறைவேற்றம்

76

 *178 மேலதிக வாக்குகளால் சபை அங்கீகாரம்

  • சரத் வீரசேகர மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பு
     
    அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் 178 மேலதிக வாக்குகளால் சற்றுமுன்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் கிடைத்துள்ளன. சரத் வீரசேகர எம்.பி மாத்திரம் எதிராக வாக்களித்தார்
    இதன் காரணமாக 22ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

  • அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கியிருந்தன.
    மேலும், மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join Our WhatsApp Group