22 ஆவது திருத்தத்திற்கு கீதா குமாரசிங்க முழு ஆதரவு : இரட்டைப் பிரஜா உரிமை நீக்கத்துக்கும் வரவேற்பு

0
40

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்றில் பிரவேசிக்க முடியாது என்ற தீர்மானம் ஒருவகையில் சரியானதே என குறிப்பிட்டார்.

தனக்கும் சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை இருந்ததாகவும், தனது கணவனும் பிள்ளைகளும் அங்கேயே இருப்பதாக தெரிவித்த அவர், தன்னால் இரட்டை பிரஜாவுரிமையை நீக்க முடிந்ததென்றால் ஏன் அரசாங்கத்தில் உள்ள சிலரால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். எனவே, இம்முறை ஓடவும் மாட்டேன், ஒழியவும் மாட்டேன் என தெரிவித்த கீதா எம்.பி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நேரடியாக ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்