போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட
பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்

20

 பொலிசாரின் மிலேச்சத்தனமான துப்பாக்கிசூட்டுக்கிலக்காகி உயிர்நீத்த பல்கலை மாணவர்களின் 6ஆவது நினைவேந்தல்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை  பொலிசின் மிலேச்சத்தனமான துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய  நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் நினைவுதினம் இன்று யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது யாழ் பல்கலையின் பிரதான தூபியில் கஜன் சுலக்சனின் நிறைவுறும் படத்திற்கு மாணவர்களால்  ஈகைச்சுடரேற்றபட்டதோடு  மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்து.கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சினால் நினைவரையும் இடம்பெற்றது.

Join Our WhatsApp Group