புறக்கோட்டையில் பருப்பு, சீனி விலைகள் குறைப்பு

79

கொழும்பு-புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய, 400 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 375 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொ த்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Join Our WhatsApp Group