படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்காக 10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் மரணத்திற்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.