நிமால் ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் இல்லை

32

ஜப்பானிய நிறுவனமான ‘டைசே’ நிறுவனத்திடம் கப்பம் கோரியதாக அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
போதிய ஆதாரம் இல்லாமல் முறைப்பாடு தள்ளுபடி செய்யப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் எழுத்துமூலமாக தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்தத் தீர்மானத்தை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Join Our WhatsApp Group