கொழும்பில் நாளை நீர்வெட்டு

71

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (22) சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் நாளை மறுதினம் (23) நண்பகல் 12 மணிவரை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுலாகவுள்ளது. அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் குறித்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக குறித்த காலத்திற்குள் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முன்கூட்டியே தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Join Our WhatsApp Group