இறக்காமம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தெரு  நாய்களுக்கு கருத்தடை

23

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டாலின் கீழ்  இறக்காமம் மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரதேசத்தில் கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை நிகழ்வுகள் கல்முனை பிராந்திய தொற்று நோயியல் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராணிகளுக்கு  தடுப்பூசி ஏற்றுனர் ஏ.டீ எம். பஸ்லின் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Join Our WhatsApp Group