இந்தியாவிலிருந்து யாழ். கக்கடைதீவிற்கு கடத்திவரப்பட்ட 400 ஜெலிக்னைற் வெடி மருந்து குச்சிகள் மீட்பு 

52

(கனகராசா சரவணன்)

இந்தியாவில் இருந்து கடல்வழியாக மூலம் யாழ்ப்பாணம் கக்கடைதீவிற்கு கடத்திவரப்பட மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை  நேற்று வியாழக்கிழமை (20) கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்துவைகக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களை ஊர்காவல்துறை பொலழஸ் நிலையத்தில் ஒணப்படைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த தீவில் மனிதர்கள் வாழுவதில்லை எனவும் அங்கு இந்தியாவில் இருந்து கடல்வழியாக இந்த வெடி பொருட்களை கொண்டுவராப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட நிலையில் அதனை கடந்த இருவரங்களுக்கு முன்னர்  கடற்படையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Join Our WhatsApp Group