69 நாட்களுக்குள் கால்பந்து சம்மேளன தேர்தல்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விளையாட்டு பணிப்பாளர் தெரிவிப்பு

16
  • ஒக்டோபர் 26ஆம் திகதி உரிய திகதியை அறிவிக்குமாறு நீதிமன்றம் பணிப்பு
    இன்று முதல் 69 நாட்களுக்குள் கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலை நடத்தவுள்ளதாக  விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
    இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹேவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
    இதன்போது, கால்பந்து சம்மேளன தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி 40 கால்பந்து லீக்குகள் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக  இணைந்துள்ளதாக நீதிமன்றிற்கு ஜஸ்வர் உமர் கூறினார்.

துரிதமாக தேர்தலை நடத்துவதன் மூலம் விரைவாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, கால்பந்தாட்ட சம்மேளனத்தின்  தேர்தலை நடத்தும்  திகதியை அன்றைய தினம் அறிவிக்குமாறு விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Join Our WhatsApp Group