45 நாட்களே பதவி வகித்த பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா

0
19
  • பிரித்தானிய வரலாற்றில் குறைந்த காலம் ஆட்சி செய்த பிரதமர் எனும் பெயரை பெற்றார் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
    இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்  இதனைத் தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தான் கன்சர்வேடிவ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை தன்னால் வழங்க முடியவில்லை என்றும், இதன் காரணமாக, தான் இராஜினாமா செய்வதாக மன்னர் 3ஆம் சார்ள்ஸிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வாரத்திற்குள் கன்சர்வேடிவ் கட்சி தலைமை தொடர்பான தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக இருக்கவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் பதவியேற்று 45 நாட்களே பதவியில் இருந்த அவர் இவ்வாறு பதவி விலகியதன் மூலம் இங்கிலாந்து வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் அவரால் கொண்டு வரப்பட்ட மினி பட்ஜெட்டை தொடர்ந்து, ட்ரஸ்ஸின் பிரதமர் பதவி தொடர்பில் கொந்தளிப்பான நிலையே இருந்து வந்தது.

நேற்றையதினம் (19) புதன்கிழமையன்று அவரது உள்துறை செயலாளரின் இராஜினாமா மற்றும் காமன்ஸில் இடம்பெற்ற குழப்பமான வாக்கெடுப்பு ஆகியன அவரது தலைவிதியை மாற்றியமைத்துள்ளது. செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் (6 வாரங்களில்) பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்