அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய(20) சபை அமர்வில் எதிர்க்கட்சியின் ஆதரவு எவ்வாறு அமையும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தமது நிலைப்பாட்டை முன்வைத்தார்.
பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு,உண்மையான எண்ணப்பாட்டின் பிரகாரம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் உள்ளடக்கங்கள் அதே வழியில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குறித்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி என்ற வகையில்,அரசாங்கம் கொண்டு வரும் அனைத்தையும் எதிர்க்கும் மரபு ஐக்கிய மக்கள் சக்தியிடமில்லை எனவும், எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்காக தம்மால் இயன்றதைச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-