22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் சபையில் சமர்ப்பிப்பு: இரட்டை பிரஜா உரிமை உள்ளோர் எம்.பி.யாக முடியாது

52

அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம் சபையில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டது. 22 ஆவது திருத்தச்சட்டத்தின் 2 ஆம் மதிப்பீட்டை சபையில் சமர்ப்பித்து நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றினார்.
“நாடாளுமன்றத்தில் புதிய கலாசாரம் ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு திருத்தங்கள் தனிப்பட்ட நலனுக்காகவன்றி நாட்டு மக்களின் நன்மைக்காகவே கொண்டுவரப்படுகிறது. கடந்த கால தவறுகளைத் தோண்டிக்கொண்டிருந்தால் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. ஆனால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.”

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டு நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்தத் திருத்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். 22 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாது என்ற விடயம் 22 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சபையில் சற்றுமுன் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group