கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு – லியோனல் மெஸ்ஸி கணிப்பு

72

22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன.உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன.

இந்த நிலையில் கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் அல்லது பிரேசில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கணித்து உள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த மெஸ்ஸி, பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரு அணிகளின் நோக்கமும் தெளிவாக இருப்பதாகக் அவர் கூறினார்.

Join Our WhatsApp Group