- செந்தில் தொண்டமான் தலையீட்டால் தீர்வு
எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் பாரம்பரியமாக மக்களால் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்து கோவில் கொடிக்கம்பம் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்விடயம் தொடர்பில் அத்தோட்ட மக்களால் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
செந்தில் தொண்டமான் இது குறித்து பொலிஸ் அதிகாரி மற்றும் இந்துக்கலாசார அமைச்சு உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, 1 மணித்தியாலத்திற்குள் மீண்டும் கோவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.