** தலைமை பதவி முதற் தடவையாக தென்னிந்தியாவுக்கு
இந்திரா காங்கிரஸின் புதிய தலைவராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகர்ஜூன் கார்கே தெரிவாகியுள்ளார். இருபது வருடங்களுக்குப் பின்னர், காந்தி குடும்பத்தவர் இல்லாதவருக்கு இப்பதவி கிடைத்துள்ளது. மேலும் முதற் தடவையாக தென்னிந்திய மாநிலத்தவர் தலைமைப் பதவிக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில், கட்சியின் ஒன்பதாயிரம் பேர் வாக்களித்தனர். தலித் இனத்தைச் சேர்ந்த 80 வயதுடைய இவர், முன்னாள் அமைச்சருமாவார். இன்னும் 18 மாதங்களின் பின்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி, ஐம்பது வயதுக்கு கீழானோருக்கு, கட்சியின் முக்கிய பதவிகளை வழங்கவுள்ளார். ஹிந்தி பேசும் மாநிலங்களில் பி,ஜே,பிக்குள்ள செல்வாக்கை தகர்க்கும் வியூகங்களுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் ஆலோசனை வழங்கவுள்ளனர்.