காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யக்கலமுல்ல, களுவலகல பிரதேசத்தில் இன்று (19) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.