அடுத்த ஆண்டு முதல், தரம் ஒன்றிலிருந்து உயர் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆங்கில கல்வியின் அவசியம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் முண்டன. ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர். சிங்களம்,தமிழ் ஆகிய தேசிய மொழிகளை பின்பற்றும் அதேவேளை ஆங்கிலத்தையும் கட்டாயமாக முன்னெடுக்க வேண்டும் என்று மனோ கணேசன் எம். பி வலியுறுத்தினார்.
ஆங்கிலம் இல்லாமல் உயர் கல்வித் துறையை தொடர்வது கஷ்டமாக இருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.
ஆங்கிலம் இல்லாமல் சட்டத்துறையில் முன்னேற முடியாது என்று அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டினார். இந்த சிறிய வாங்கப் பிரதிவாதங்களுக்கு பதில் அளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த “தற்போது இந்த வசதி ஆறாம் தரத்திற்கு மேல் உள்ளது. அடுத்த ஆண்டு முதலாம்தரத்திலிருந்து ஆங்கில மொழி மூல கல்வி கற்பிக்கப்படும் ” என்றார்.