வாழ்வா – சாவா நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ்: ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

0
19

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் இன்று பி பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் 42 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதிலும் தோற்றால் சூப்பர்12 சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழக்க வேண்டியது தான். அதே சமயம் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை தோற்கடித்த ஜிம்பாப்வே 2-வது வெற்றிக்கு குறி வைத்து களம் காணுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் வெஸ்ட் இண்டீசும், ஒன்றில் ஜிம்பாப்வேயும் வெற்றி கண்டுள்ளன. முன்னதாக காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து- அயர்லாந்து அணிகள் மல்லுகட்டுகின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்