மம்முட்டியுடன் புதிய படத்தில் இணைந்த ஜோதிகா ; கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ!

81

மலையாள திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் மம்முட்டி. மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் கூட, பீஷ்ம பர்வம், சிபிஐ 5, புழு, ரோஸாக் உள்ளிட்ட திரைப்படங்கள் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி உள்ளது.

இவை அனைத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து சிறப்பான படங்களை மம்முட்டி கொடுத்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, ‘கிறிஸ்டோபர்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் மம்மூட்டி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், மம்முட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளி வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு, பெண்களை மையப்படுத்தி கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார் ஜோதிகா.

பாலா இயக்கத்தில் நாச்சியார், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், ராதாமோகனின் காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கலில் நடித்தார். மலையாளப்படமான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே மூலம் ஒரு சூப்பரான கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மம்முட்டியுடன் இணைந்து புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ போஸ்டரை நடிகர் மம்முட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டரும் வெளியாகி உள்ளது. “காதல் – The Core” என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த ஜியோ பேபி இந்த திரைப்படத்தையும் இயக்க உள்ளார். பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா என்ட்ரி கொடுக்க உள்ளார்.

நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ஜோதிகா, அவர் கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது.

இந்த வயதில் ஒருவர், எப்படி இப்படி இருக்க முடியும் என்ற வியப்பினை தருகிறது. வெளியிட்ட அந்த வீடியோவுடன், ” இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்துக்கொள்கிறேன். வயது என்ன, என்னை மாற்றுவது, அந்த வயதை நான் மாற்றுகிறேன்!”என்று குறிப்பிட்டு உள்ளார்.

VIDEO LINK: –
https://www.instagram.com/reel/Cj4daKzrpm8/?utm_source=ig_web_copy_link
Join Our WhatsApp Group