மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண. பல்லேகம சிறினிவாசவின் இறுதிக் கிரியையை பூரண அரச மரியாதையுடன் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
அப்பணிகளை முன்னெடுப்பதற்காக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
இலங்கை பௌத்த தேரர்களிடையே முக்கியமான ஒருவரான மறைந்த தேரர், தனது துறவி வாழ்வை அர்த்தபுஷ்டியாக செலவிட்டுள்ளார்.அன்னார் வடமத்திய மக்களுக்கு மட்டுமன்றி இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் நலனுக்காக அளப்பற்றிய சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.