பாலிவுட்டில் களம் இறங்கும் சிம்பு?..

75

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பாலிவுட் சினிமாவில் சத்ராம் ரமானி இயக்கும் ‘டபுள் எக்ஸ்.எல்.’ என்ற படத்தில் சிம்பு பாடகராக அறிமுகமாகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கி வரும் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பத்து தல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி உள்ளார். சத்ராம் ரமானி இயக்கும் ‘டபுள் எக்ஸ்.எல்.’ என்ற படத்தில் ‘தாலி… தாலி…’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த படத்தில் ஹீமா குரோஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகத் உள்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் பாடகராக சிம்பு அறிமுகமாகி இருக்கிறார். ரசிகர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Join Our WhatsApp Group