நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கே 53 கி.மீ. தொலைவில் இன்று மதியம் 2.52 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்நிலடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது.
இதனால், அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு தேடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.