ஓமான் சுல்தானை சந்தித்தார் தூதுவர் சபருல்லாக்ஹான்

165

ஓமான் நாட்டின் இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சபருல்லாக்ஹான் நேற்று தனது நியமனக் கடிதத்தை ஓமான் நாட்டின் அதி உத்தம தலைவர் சுல்தானிடம் கையளித்தார்.

சுல்தான் நாடான ஓமானின் அதிஉயர் தலைவர் Haitham bin Tarik ஐ ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அல் – பரக்கத் மாளிகையில் சந்தித்த தூதுவர் சபருல்லாக்ஹான் இலங்கை நிலைமை தொடர்பாக சுல்தானிடம் விளக்கமளித்தார்.

தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.எல். சபருல்லாக்ஹான்,1994 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு தூதுவராகவும் இராஜதந்திர சேவையிலும் நீடித்து வருகிறார். சவுதி அரேபியா, இந்தியா, கட்டார் உட்பட பல்வேறு நாடுகளின் தூதுவராக பணியாற்றி இருக்கிறார். வெளிநாட்டு சேவையில் Protocol அதிகாரியாகவும்சபருல்லாக்ஹான் பணியாற்றியுள்ளார்

Join Our WhatsApp Group