எஸ்.லீ ஞாபகார்த்த கிண்ணம் : நுவரெலிய பேட்ஸ் அணி சம்பியனானது

20

(க.கிஷாந்தன்)
நுவரெலியா யங் பேட்ஸ் கால்பந்தாட்ட அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எஸ். லீ ஞாபகார்த்த கிண்ணத்திற்கான அணிக்கு 07 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் சன் பேட்ஸ் அணி சம்பியனானது. 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நுவரெலியா மாநகர சபையின் மைதானத்தில் நேற்று முன்தினம் (17.10.2022) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கல்வே அணியை வென்றே சன் பேட்ஸ் அணி சம்பியனானது.

இப்போட்டியில் ஆரம்ப பாதி நேரத்தில் 3-0 என்ற அடிப்படையில், சன் பேட்ஸ் அணி முன்னிலை வகித்திருந்ததோடு, இரண்டாம் பாதி நேரத்தில் 3-1 என்ற அடிப்படையில் சன் பேட்ஸ் அணி முன்னிலை வகித்தது. இதனையடுத்து 6-1 என்ற அடிப்படையில் சன் பேட்ஸ் அணி வென்றிருந்தது.

தொடரின் நாயகனாக சன் பேட்ஸ் அணியின் ஜே.திலிப்குமார், சிறந்த கோல் காப்பாளராக சன் பேட்ஸ் அணியின் கார்த்திக்கும் தெரிவாகினர்.இத்தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்ற கல்வே அணிக்கு 20,000 ரூபாய் பணப் பரிசிலும், வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பியனான சன் பேட்ஸ் அணிக்கு 30,000 ரூபாய் பணப் பரிசிலும் வெற்றிக் கிண்ணமும்  வழங்கி வைக்கப்பட்டது.
 
அத்தோடு, சிறந்த கோல் காப்பாளராக சன் பேட்ஸ் அணியில் தெரிவு செய்யப்பட்ட கார்த்திக்கு 5000 ரூபாய் பணப் பரிசிலும் கிண்ணமும்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Join Our WhatsApp Group