அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலர் இலங்கை வந்தடைந்தார்

16

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார்.
இலங்கையை வந்தடைந்த டொனால்ட் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார். இதனை அமெரிக்கத் தூதுவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Join Our WhatsApp Group