** சபாநாயகர் உத்தியோகபூர்மாக அறிவிப்பு
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹோத் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் (18) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக, குறித்த குழுவில் பணியாற்றுவதற்காக அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 127(8) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் என்பதை சபாநாயகர் இதன்போது அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அரசாங்கக் கணக்குகள் (COPA) பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார்.
இவை தவிர பின்வரும் அறிவிப்புகளையும் சபாநாயகர் இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு விடுத்தார்.
