கீலாங்: 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
15வது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன் அந்த ஓவரில் பனுகா ராஜபக்ச ,சரித் அசலங்கா ,தசுன் ஷானகா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்து அசத்தினார்.