பெரும் போகச் செய்கைக்கு தேவையான உரங்கள் அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தில் மேலும் 34,000 மெற்றிக் தொன் யூரியா எஞ்சியுள்ளதாகவும், அவை பெரும் போக நெற்பயிர்ச் செய்கையின் முதல் சுற்றுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு சோளப் பயிர்களுக்கு யூரியா உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.