இந்த வருட இறுதியில் ஓய்வு பெறவிருந்த மருத்துவர்களின் ஓய்வு கால எல்லை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை திட்டத்துக்கு அமைய, அரசாங்க ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்.
60 வயதில் ஓய்வு பெறுகின்ற பொழுது மருத்துவத் துறையில் பாரிய வெற்றிடம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அரசாங்கம் மாற்று நடவடிக்கை எடுத்திருக்கிறது.