மகாவலி வலயத்தினுள் தமிழ் கிராமங்களை உள்வாங்கும் திட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் எதிர்ப்பு – நிறுத்தினார் ஜனாதிபதி

0
40

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடுமையான ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுமார் 70 வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழுகின்ற குறித்த கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு எந்தவிதமான அவசியமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன், இவவாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், குறித்த முயற்சிகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதுதொடர்பான அறிவுறுத்தல்களையும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்