புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது. இன்று (18) முதல் இது அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.