பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பொலிசாரால் கலைப்பு

41

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுவிக்கக் கோரி களனிப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம் பொலிஸாரால் கலைக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறும் பாதையில் பல்வேறு இடங்களில் பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் தண்ணீர் பீரங்கிகளும் குவிக்கப்பட்டிருந்ததோடு, மாணவர்கள் வீதியில் ஆர்ப்பாட்டமாக செல்லும் முயற்சியை கலகத் தடுப்பு பொலீசார் தடுத்து நிறுத்தினர்.

திரும்பிச் சென்ற மாணவர்கள், களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலைந்து சென்றனர்.

Join Our WhatsApp Group