நாட்டைக் கட்டி எழுப்பு வதற்கான ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே -சஜித்

0
20
  • எதிர்க்கட்சித் தலைவர் சஜித் படுவஸ்நுவரவில் தெரிவிப்பு.

இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒரேயொரு தெரிவு தான் உள்ளதாகவும்,அது இல்லாமல் ஒரு பயணமோ எதிர்காலமோ இல்லை எனவும் அந்தத் தெரிவே ஐக்கிய மக்கள் சக்தி தான் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் (15) படுவஸ்நுவரவில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் படுவஸ்நுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றதுடன் பெருந்திரளான ஆதரவாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அவர்களும் ஒன்று,இவர்களும் ஒன்று என அறிக்கை வெளியிடும் சிலர்,தாங்கள் மிகவும் தூய்மையானவர்கள் என்று கூற முற்படுவதாகவும், ஆனால்,அவர்களே சுனாமி திருட்டில் ஈடுபட்ட நபரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்ததாகவும்,பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களில் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்ததாகவும்,அதை அவர்கள் மறந்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாத வகையில் நாட்டிற்கு பெறுமதி சேர்க்கும் பணியை எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்கள் மூலம் மிகப்பெரிய பணி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளுக்கு 165 மில்லியன் ரூபா பெருமதியான பேரூந்துகள் கூட நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்றிலிருந்து இன்று வரை தாம் கூறியவை,செய்தவை அனைத்தும் உண்மையாகிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அன்று,தான் இவற்றைச் சொல்லும் போது சிரித்த அதே தரப்பினர் இன்று அந்த விடயங்களை ஆமோதித்து அறிக்கை வெளியிடுவது கேலிக்கூத்தானது எனவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையற்ற தன்மையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள ஒரே வழி புதிய மக்கள் ஆணை ஊடான புதிய அரசை உடனடியாக நியமிப்பதே என தான் கூறிய போது மூளையை சோதித்துப் பார்க்க வேண்டும் என சிலர் கூறினர் எனவும்,
இன்று அவர்களே தேர்தலொன்றை வேண்டி அழுது புலம்புவதாகவும் தெரிவித்தார்.

அடக்குமுறை,அச்சுறுத்தல் மூலம் இந்நாட்டு மக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது எனவும் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்