டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நமிபியா அணி.

0
37

கீலாங்: 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் சுற்று ஆட்டத்தில் நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற நமிபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக மைகேல் வான் லின்கன் மற்றூம் திவான் லே காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் திவான் ஆட்டத்தின் 2வது ஓவரில் டக் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீபன் பார்ட் களம் புகுந்தார். இந்நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் 20 ரன்னுக்கும், அடுத்து களம் இறங்கிய ஜான் நிகொல் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஸ்டீபன் பார்ட்டுடன் ஜான் பிரைலின்க் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 63 ரன்னாக உயர்ந்த போது பிரிந்தது. ஸ்டீபன் பார்ட் 19 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய எராஸ்மஸ் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அந்த அணி தரப்பில் பிரைலின்க் 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

நெர்தர்லாந்து அணி தரப்பில் லீடீ 2 விக்கெட்டும், டிம் பிரிங்கிள், காலின், பால் வான் மீக்கிரென், வான் டெர் மெர்வ் ஆகியோர் தலா 1 விக்கெ வீழ்த்தினர். இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்