கால்பந்து போட்டியின் உயரிய விருதை வென்றார் பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா..!

0
31

பாரிஸ்: ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்டுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை மெஸ்ஸி வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான விருதை வெல்லும் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார் இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா வென்றுள்ளார். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றது. அந்த அணிக்காக விளையாடிய அவர் 46 ஆட்டங்களில் 44 கோல்களை பதிவு செய்திருந்தார்.

விருது வென்றது குறித்து கூறிய கரிம் பென்சிமா; பாலன் டி ஓர் விருது தனிப்பட்டதாக இருக்கலாம் ஆனால் அது ஒரு கூட்டு விருது. விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். “இந்த விருதை வெல்வது எப்போதும் என் மனதில் இருந்த ஒன்று,” என்று அவர் கூறினார்.

அதிகபட்சமாக மெஸ்ஸி இந்த விருதை 7 முறை வென்றுள்ளார். ரொனால்டோ 5 முறை இந்த விருதை வென்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்