காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்மத் மௌலவி கைது

40

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால், இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Join Our WhatsApp Group