ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்

41

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பின்ச், ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்த்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அடுத்த கேப்டன் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடடம் இருந்தது இந்த நிலையில் பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுளளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தற்போது கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார்வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர் முதல் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து கம்மின்ஸ் கூறியதாவது ; நான் பின்ச்-யின் கீழ் விளையாடுவதை மிகவும் ரசித்தேன் மற்றும் அவரது தலைமையிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எங்கள் ஒரு நாள் போட்டி அணியில் அதிக அனுபவம் உடைய வீரர்கள் இருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம், என கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group