அநுராதபுரம், பாதெனிய வீதியில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக, நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர். இன்று மு.ப. 10.00 மணியளவில் அநுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கி பயணித்த கார் ஒன்று ரிதிபதியெல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த புளியமரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்விபத்தில் 3 வயதுடைய அதிஷ மனுல, சுனந்த வர்ணகுலசூரிய (74), எம்.எம். லீலாவதி (70) ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காரின் ஒரு பகுதி கடுமையாக சேதமுற்ற நிலையில், காயமடைந்தவர்களை வாகனத்தில் இருந்து வெளியே எடுப்பதற்கு சுமார் 20 நிமிடம் வரை போராடியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

