ஜனாதிபதியின் ரணில் விக்கிரமசிங்க உடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே அமெரிக்காவிலிருந்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பாகவும் இருவரும் பெரும்பாலும் பேசி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கட்சி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக பசில் ராஜபக்ச அறிவித்திருந்த நிலையிலும், மொட்டுக் கட்சியின் தீர்மானிக்கும் சக்தியாக அவரே திகழ்கிறார் என்று பொதுசன பெரமுன வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.