எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் அடிப்படையில் பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தயாராக இல்லை என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் முச்சக்கரவண்டி சங்கம் என்பன அறிவித்துள்ளன. பெற்றோல் விலை குறைப்பானது பஸ் தொழிற்துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்